அது மாத்திரமன்றி, சுகாதார வளங்களை இலங்கையர்கள் தேசிய ரீதியில் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும், மேற்கொள்ளாத பாரிய பணியை சுகாதாரத் துறையில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்ததன் மூலம் இத்துறையில் பாரிய முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டதுடன் மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முடிந்தது. இருப்பினும், இது தொடர்பில் சமூகத்தின் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் சரியான தெளிவின்மை கவலைக்குரிய விடயம் என்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மருந்து வகைகளுக்காக முன்னைய அரசாங்கம் ஒதுக்கீடு செய்த தேவையற்ற பாரிய தொகையை தற்போதுசேமிக்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறினார். இந்த நிதியைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடிந்ததாக கூறினார்.