இருளில் உள்ள பகுதிகளில் வீதி மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகள் செயலிழந்து காணப்பட்டும் பல வீதிகளில் மின் விளக்குகள் இன்மையாலும் புதிய வீதி மின் விளக்குகளை பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பொது மக்களின் கோரிக்கைக்கு அமையவும் இவ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களது பகுதிகளில் வீதி மின்விளக்குகள் இல்லையெனில் உடன் அறிவிக்குமாறும் செயலாளர் பொது மக்களை கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் ஏனைய பிரதேசங்களில் மின் விளக்குகள் பல பழுதடைந்து இருளடைந்து காணப்படுவதால் விபத்துக்கள் இடம் பெறுவதை தவிர்க்கும் நோக்கிலும் , பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கிலும் வீதி மின் விளக்குகள் பொருத்தும் வேலைத் திட்டம் தற்போது இடம் பெற்று வருகின்றன.

மேலும் பொதுமக்களினால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளில் உள்ள இடங்களுக்கும் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. எனவே தங்களுடைய பிரதேசங்களிலும் வீதி மின் விளக்குகள் பழுதடைந்து காணப்படின் உரிய முறைப்படி அல்லது 0262236171 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அறிவிப்பதன் மூலம் தங்களுடைய பிரதேங்களுக்கும் மினவிளக்குள் பொருத்த நடிவடிக்கை எடுக்க முடியும்.

எனினும் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட பின்னர் சில பிரதேசங்களில் அவற்றை உடைக்கும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறு உடைக்கும் நபர்களுக்கெதிராக பொதுச்சொத்தை சேதப்படுத்திய காரணத்துக்காக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனவும் தனது ஊடக அறிக்கையின் போது பொதுமக்களை மேலும் கேட்டுள்ளார்.(ஹஸ்பர் ஏ ஹலீம்)

இருளில் உள்ள பகுதிகளில் வீதி மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை

கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி மின் விளக்குகள் செயலிழந்து காணப்பட்டும் பல வீதிகளில் மின் விளக்குகள் இன்மையாலும் புதிய வீதி மின் விளக்குகளை பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்துள்ளார்.கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பொது மக்களின் கோரிக்கைக்கு அமையவும் இவ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களது பகுதிகளில் வீதி மின்விளக்குகள் இல்லையெனில் உடன் அறிவிக்குமாறும் செயலாளர் பொது மக்களை கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் ஏனைய பிரதேசங்களில் மின் விளக்குகள் பல பழுதடைந்து இருளடைந்து காணப்படுவதால் விபத்துக்கள் இடம் பெறுவதை தவிர்க்கும் நோக்கிலும் , பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கிலும் வீதி மின் விளக்குகள் பொருத்தும் வேலைத் திட்டம் தற்போது இடம் பெற்று வருகின்றன.

மேலும் பொதுமக்களினால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளில் உள்ள இடங்களுக்கும் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. எனவே தங்களுடைய பிரதேசங்களிலும் வீதி மின் விளக்குகள் பழுதடைந்து காணப்படின் உரிய முறைப்படி அல்லது 0262236171 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அறிவிப்பதன் மூலம் தங்களுடைய பிரதேங்களுக்கும் மினவிளக்குள் பொருத்த நடிவடிக்கை எடுக்க முடியும்.

எனினும் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்ட பின்னர் சில பிரதேசங்களில் அவற்றை உடைக்கும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறு உடைக்கும் நபர்களுக்கெதிராக பொதுச்சொத்தை சேதப்படுத்திய காரணத்துக்காக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனவும் தனது ஊடக அறிக்கையின் போது பொதுமக்களை மேலும் கேட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -