
வாழைச்சேனை YMMA அகில இலங்கைYMMA பேரவையினால் நடாத்தப்பட்ட 1 வருட சிங்கள மொழி கற்கை நெறியினை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.எ.பேரவையின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் ஜனாப் எ.பி.எம்.இர்பான் ஆசிரியர் ஒருங்கமைப்பில் வாழைச்சேனை YMMA அகில இலங்கைYMMA பேரவையின் தலைவர் எம்.எஸ்.எம்.றிபாய்ன்தீன் BSc அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு
YMMA பேரவையின் தேசிய பொது செயலாளர் ஜனாப் சஹீத் எம்.ரிஸ்மி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மேலும் கௌரவ அதிதியாக முன்னால் வலயக்கல்விப்பணிப்பாளர் அல்.ஹாஜ் சேகு அலி SLEAS அவர்களும், வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி பேஸ் இமாம் ஏ.எல்.முஸம்மில் அவர்ளும் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஆசிரிய ஆலோசகர் ஜனாப் எம்.ஐ,சல்மான் வஹாப் , வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் அல்.ஹாஜ் எம்.டி.எம்.பரீட்,,வாழைச்சேனை கே.சுபைர் ஆசிரியர் , காவத்தமுனை அல்.அமீன் வித்தியாலய பிரதி அதிபர் எச்.எம்.இஸ்மாயில் ,வாழைச்சேனை இக்பால் சனசமூக நிலையத்தின் தலைவர் எ.எல்.எம்.லியாப்தீன் JP ,சிங்களப்பாட ஆசிரியர் எ.சி.இர்பான் காதர், அகில
இலங்கை வை.எம்.எம்.எ.கல்குடா தொகுதிக்கான தலைவர் ஜனாப் எம்.ஐ,ஜஹாப்தீன் JP வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வாயல் செயலாளர் பி.எம்.இஸ்மாயில் JP மற்றும் நியு ஸ்டார் விளையாட்டுக்கழகத் தலைவர் எம்.எப்.எம்.ஜவ்பர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டதுடன் மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.இதன் போது மாணவர்களின் சிங்கள மொழிலான கலை நிகழ்வுகளும் நடைபெற்றது





