மாகாணசபை உறுப்பினர் கல்முனை ஜவாத் அமைச்சர் றிஷாத்துடன்......!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

வாத்…..மரத்திலிருந்து மயிலுக்கு…!

மகாபாரதத்தின் 18 ஆவது நாள் போரை
கல்முனைக்கு இதற்காவும் ஒப்பிட்டேன்!

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவருடன் சற்று நேரத்துக்கு முன்னர் (நள்ளிரவு12.00 மணி) நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போது கீழ்வருமாறு தெரிவித்தார்.

“டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது. இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கு காரணம்.”

“கல்முனையில் இப்போதுள்ள சூழ்நிலைக்கும் எதிர்கால சூழ் நிலைக்கும் ஏற்ற ஒருவராக நான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கருதுகிறேன்.

எனவே, நான் அந்தக் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -