வவுனியா திருநாவற்குளத்தில் பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!-படங்கள்






வுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் திருநாவற்குளத்தில் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்களுக்கான பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

"கிராமங்கள் நோக்கிய கல்வி வளர்ச்சி" எனும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயற்றிட்டத்தின் ஊடான கழக உறுப்பினர்களின் நிதி அன்பளிப்பில் இவ் திட்டம் முன்னெடுக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.


இவ் நிகழ்வில் வவுனியா வடக்கு கல்வி வலய ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு ரகுபதி, வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு சி.ரவீந்திரன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன், ஐயனார் விளையாட்டுக்கழக தலைவர் திரு பே.அனோஜன், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி ந.சோதிமதி, வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு லம்போதரன், சிவில் பாதுகாப்பு குழு செயலாளர் திரு சோதிநாதன், நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு கணேஷ், திருநாவற்குள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், கழக உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -