மு.இராமச்சந்திரன்-
கொட்டகலை எரிபொருள் கலஞ்சியசாலைக்கு பெற்றோல் கொண்வந்த பவுசர் விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியிலே 06.12.2017 அதிகாலை புவுசரின் பின் சில்லு திடீரென கழன்று பாதையோர பாதுகாப்பு மேடையில் மோதுண்டு விபத்துக்குள்ளானது
முத்துராஜவெலயிலிருந்து 33 ஆயிரம் லீட்டர் பெற்றோல் ஏற்றி வந்த பவுடர் விபத்துக்குள்ளானமையினால் போக்குவரத்து ஒருவழி பாதையில் இடம்பெறுவதுடன் சாரதியின் சாமர்த்தியத்தால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பிரிதொரு பவுசரினூடாக எரிபொருளை கொட்டகலை எரிபொருள் களஞ்சிய சாலைக்கு கொண்டு செல்ல பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.