கிழக்குமாகாணத்தில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஊர்களில் ஏறவூரும் ஒன்றாகும்.
அதிலும் ஏறாவூர் முதலாம்குறிச்சி மிகவும் பின்தங்கிய ஏழை மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாகும்.
இங்கு அமைந்துள்ள வாளியப்பா ஜும்மா பள்ளிவாசல் மிகவும் சிறியது.
இப்பள்ளிவாசலைச்சுற்றித் தகரத்தால் கொட்டில்கள் அமைக்கப்பட்டும் ஜும்மாத் தொழுகைக்கும் முக்கியமானவர்களின்
ஜனாசாத்தொழுகை என்பவற்றுக்கும் வெட்டவெளியில்தான் தொழ வேண்டிய நிலை.
அதிலும் மாரிகாலத்தில் சமாளிக்க முடியாத பிரச்சினை.
இந்த இடநெருக்கடிக்கு மத்தியில் இங்கு ஒரு மதரசாவும் நடை பெற்று வருகிறது.
இப்பள்ளிவாசல் மஹல்லா வாசிகளிடம் அறவிடப்படும் சந்தாப்பணத்தைக் கொண்டு கதீப், முஅத்தின் சம்பளம் மின்கட்டணம் என்பவற்றையே செலுத்த முடியாதுள்ளது.
இந்த நிலையில் இங்கு ஒரு பள்ளிவாசலை அமைப்பதென்பது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு விடயமாகும்.
இருந்தாலும் தற்போது இப்பள்ளிவாசலைச் சிறந்த முறையில் நிர்வகித்துவரும் நிர்வாக சபையினர் இப்பள்ளிவாசலை மதரசாவிற்குக் கையளித்து விட்டுப் பக்கத்திலுள்ள தாராளமான இடப்பரப்பில்
ஒரு புதிய பள்ளிவாசலை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கெங்கோ முக்கியத்துவமல்லாத இடங்களிலெல்லாம் பாரிய பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது ஒரு முக்கியமான இடமும் பாரிய தேவையுள்ள ஒரு பள்ளிவாசலுமாகும்.
இதற்கு தனவந்தர்கள் முன்வந்தால் இவ்விடயம்
இலகுவானதாகி விடும்.
அல்லது ஏதாவது ஒரு அமைப்பினர் இப்பள்ளியைக்கட்டிக் கொடுக்க முன்வந்தால் பேருதவியாக இருக்கும்.
இது அழ்ழாஹ்வுடைய மாளிகை தயவு செய்து வசதி உள்ளவர்கள்
உங்களால் முடிந்த உதவியையாவது செய்யுங்கள்.
அறபிகளோடு தொடர்புள்ளவர்களும் இவ்விடயத்தில் அவர்களது உதவிகளையும் பெற்றுக்கொள்ள உதவி செய்யுங்கள்.
அழ்ழாஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வான்.
VALIYAPPA THAIKKA MOSQUE
PEOPLES BANK
ERAVUR BRANCH
SRI LANKA
A. C. NO. 123100100042368
தொடர்புகளுக்கு.. 0094775392419
ERAVUR BRANCH
SRI LANKA
A. C. NO. 123100100042368
தொடர்புகளுக்கு.. 0094775392419