மருதமுனையில் கிணறுகளும்,கடலும் வற்றியதாக பரவிய செய்தியை தொடர்ந்து பாடசாலைகளில் பெற்றோர்..!







பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனையில் கிணறுகளும்,கடலும் வற்றியதாக பரவிய செய்தியை அடுத்து கிழக்கில் சுனாமி ஏற்படப்போவதா மக்கள் பரபரப்படைந்து அல்லோல கல்லோல பட்ட சம்பவம் நேற்றுக் காலை(15-11-2017)10.மணியளவில் கிழக்கில் பெரும் பரபரப் ஏற்படுத்தியது.

இது விடையம் தொடர்பாக தெரிய வருவதாவது மருதமுனையில் சில இங்களில் கிணறுகள் வற்றியதாகவும்.அதைத்தொடர்ந்து கடலும் வற்றியதாகவும் செய்திகள் வெளியாகின இந்தச் செய்திகளை கேள்வியுற்ற மக்கள் பெரும் பதற்றமடைந்த நிலையiயில் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர்.

இதனால் இந்தச் செய்தி பல கிரமங்களுக்கும் பரவியது இதையடுத்த பெற்றொர்கள் பாடசாலைகளை முற்றுகையிட்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றதோடு பாதுகாப்பான இடங்களுக்கும் சென்றனர்.இந்த நிலையில் கிணறுகள் வற்றவுமில்லை கடலும் வற்றவுமில்லை என்ற செய்தி வதந்தி என்ற உண்மை தெரிய வந்தது.

இதனையடுத்து கல்முனை பொலிசார் வணக்கஸ்தலங்களுக்குச் சென்று இந்தச் செய்தியில் எந்த உண்மையுமில்லை இது வந்தி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இருந்து எந்த வித அறிவித்தல்களும் வரவில்லை யாரும் பதற்றப்பட வேண்டாம் என அறிவித்ததைத் தொடர்ந்து நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பொறுப்பற்ற வகையில் சிலர் பரப்புகின்ற வாந்திகலால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.கடலோரத்தில் வாழ்கின்ற ஊடகவியலாளர் என்ற வகையில் கிணறுகளும்,கடலும் வற்றியதாப் பரப்பப்பட்ட செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -