தற்கொலை செய்துகொண்டவர் 52 வயதான சந்திரசிறி குலரட்ண என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இச்சம்பவம் கம்பளை வத்தேஹேன பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேற்படி மந்திரவாதி தனது வீட்டுக்கு அருகாமையில் சிறிய கோவில் ஒன்றினை அமைத்து அதில் மந்திர வேலைகளில் ஈடு பட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினம் கோயிலை சுத்தம் செய்ய தனது மூத்த மகனின் மனைவியான 22 வயதான மருமகளை அழைத்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மருமகளை வல்லுறவிற்குட்படுத்த முயன்ற வேளை, மருமகள் கூச்சலிடவே அவ்விடத்திற்கு வந்த மகன் தந்தையை தாக்கிவிட்டு மனைவியுடன் வீட்டிலிருந்து வெளியேற முற்பட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட மந்திரவாதி பிள்ளைகளை வெளியேற விடாமல் தடுத்துள்ளதுடன் தான் வெளியேறுவதாக கூறி வீட்டை விட்டு சென்றே கோயிலுக்குள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.