பஸ் - வேன் விபத்து




க.கிஷாந்தன்-
லவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை வட்டகொடை பகுதியில் 20.10.2017 அன்று காலை 6.40 மணியளவில் தனியார் பஸ் மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் தலவாக்கலையிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் வட்டகொடை தோட்டப் பகுதியில் இவ்வாறு மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -