ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் முன்னாள் கிழக்கு முதல்வரின் திட்டம் நாளை அங்குரார்ப்பணம்

ல்விக்கு கரம் கொடுப்போம் எனும் தொனிப் பொருளில் ஆரம்பப்பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் உன்னதத் திட்டத்தின் முதற்கட்டம் நாளை (31.10.2017)அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

இந்தத்திட்டம் அடையாளங்காணப்பட்ட 5 ஆயிரம் பாடசாலைகளில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத்திட்டத்தின் முதற்கட்டமாக நாளை 31.10.2017 அன்று ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் இடம் பெறவுள்ளது.

இதன் போது அல் முனீரா மகா வித்தியாலயத்தின் தரம் 01 முதல் 05 வரையான வகுப்புக்களில் கல்வி பயிலும் 260க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு முன்னாள் கிழக்கு முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால் கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தொடர்ச்சியாக அடையாளங்காணப்பட்ட பாடசாலைகளில் தரம் 01 முதல் 05 வரையான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பைகள் வழங்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -