உள்ளுராட்சிசபை விடயமாக ஆட்டம் ஆடவருபவர்களுக்கு இடமில்லை- சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல்



எம்.வை.அமீர்,யூ.கே.கலித்தீன்-

சாய்ந்தமருதில் தற்போதுள்ள நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு யாராவது தாம் வகிக்கின்ற பதவிகளை இராஜினாமா செய்து விட்டு வந்திருக்கின்றோம் என்ற மாயையை ஏற்படுத்திக்கொண்டு தங்களது பயணத்தில் இணையும் எண்ணம் இருந்தால் அந்த என்னத்தைக் கைவிடுமாறும் அவ்வாறு இராஜினாமா செய்தாலும் உங்களது வீடுகளிலேயே இருந்து கொள்ளுங்கள் என்றும் அப்படி தங்களது புனித பயணத்தில் இணைய விரும்பினால் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை பிரகடனப்படுத்திய அரச வர்த்தமானியை கையேடு கொண்டுவருமாறும் அவ்வாறு வந்தால் மிகப்பிரமாண்டமான மேடையில் வரவேற்க காத்திருப்பதாகவும் சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருதில் உள்ளுராட்சிசபையை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் பிரமாண்டமான ஒன்று கூடல்கள் இடம்பெற்று வரும் சூழலில் 2017-10-30 ஆம் திகதி சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிசபைக் கோரிக்கை சம்மந்தமாக பல இடங்களில் அலைந்து நிறைய அரசியல்வாதிகளை சந்தித்தும் ஏமாற்றங்கள், கழுத்தறுப்புக்கள் மற்றும் சதிகளை சந்தித்ததாகவும் ஏமாற்றப்பட்டுள்ள நிலையிலேயே போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருவதாகவும் இதனை சாய்ந்தமருது மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினரும் போது அமைப்புக்களும் கொண்டு செல்வதாகவும் நம்பியிருந்த அரசியல்வாதிகள் கோரிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளதால் இவர்கள் மீது நம்பிக்கையிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே வழமையான ஆட்டம் ஆடவந்தால் அது தங்களது உணர்வுபூர்வமான போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போலாகிவிடும் இந்த முடிவை உங்களது கடந்தகால வரலாற்றுச் செயற்பாடுகள் தான் தங்களை இவ்வாறு கூறவைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையை பள்ளிவாசலின் செயலாளரும் இளைஞர் முகம்மட் அஸீமும் வெள்ளமென கூடியிருந்த மக்கள் மத்தியில் வாசித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -