கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165 வது பரிசளிப்பு விழா நேற்று 16 நவங்க மண்டபத்தில் நடைபெற்றது


அஷ்ரப் ஏ. சமத்-
கொழும்பு ரோயல் கல்லுாாியின் 165 வது பரிசலிப்பு விழா நேற்று 16 நவங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கல்லுாாியின் பழைய மாணவா்களான அமைச்சா் அகில விராஜ் காரியவாசம், ரவுப் ஹக்கீம், பைசா் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, கயந்த கருநாதிலக்க, ரவி கருநாயக்க ஆகியவா்களும் கலந்து கொண்டு 2014 -15 ஆண்டுகளில் கல்வி, கலை, கலா்சசாரம், கண்டுபிடிப்பு விளையாட்டு ஆகிய துறைகளில் உச்ச திறமைகளை காட்டியவா்களும் சாதாரண தரங்களில் 9 ஏ உயா்தரத்தில் 3 ஏ திறமைச் சித்திகளை பெற்றவா்களுக்கும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தாவது -
பாடசாலை மாணவா்களுக்குகிடையே நிலவுகின்ற போட்டிகளை விட பெற்றோா்கள் பெரிதும் போட்டி விரக்தி மற்றும் பரீட்சைகளில் தமது பிள்ளைகளை எப்படியாவது பரீட்சியில் சித்தியடையச் செய்ய வேண்டும் என பிரயத்தனம் செய்கின்றனா் பரீட்சையில் சித்தியடையத் தவரும் பிள்ளைகள் விரக்தி போன்ற சில சம்பவங்கள் அறியக் கூடியதாக உள்ளது.

மாணவா்களை பரீட்சையில் சிறந்த பெறுபேறுக்காக போட்டி பொறாமை ஏற்படுத்தாது பெற்றாா்களக்கும் கல்வியமைச்சு அறிவுரைகளை வழங்கும் கருத்தரங்குகளை நடாத்துமாறு ஜனாதிபதி கல்வியமைச்சரை வேண்டிக் கொண்டாா்.

அண்மையில் என்னைக் காண வந்த ஒரு பல்கலைக்கழக உபவேந்தா் கூறியதாவது பல்லைக்கழகத்திற்குள் வந்து போதைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றதாக தெரவித்தாா். இதனால் போதைப்பொருள் பாவணையாள் மாணவா்கள் துாண்டப்படுகின்றனா். எனவும் கூறினாா்.

பாடசாலைகளில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிட்சையில் இருந்து பெற்றோறும் மாணவா்கள் அந்தப் பரீட்சையில் சித்தியெய்வதற்காக தமது பிள்ளைகளை பல பிரயத்தனங்கயும் அர்ப்பண்த்தினையும் செய்கின்றனா். இதில் இருந்து மாணவா்களுக்கிடையே போட்டி பொறாமை சிறுபிரயாத்திலேயே ஏற்படுத்தப்படுகினறது. பரீட்சையில் சித்தியெ்யாத மாணவா்கள் விரக்தியுற்ற சில சம்பவங்களும் அண்மையில் பதிவாகியுள்ளன. இவற்றில் இருந்து மாணவா்கள் நல்ல சிறந்த ஒழுக்க கட்டமைப்புகள் பாடசாலையிலும் பெற்றாா் மட்டத்திலும் உருவாக்கப்படல் வேண்டும். 

கொழும்பு ரோயல் கல்லுாாியில் கற்றவா்கள் பிரதம மந்திரி தொடக்கம் அமைச்சரவையிலும் பல அமைச்சா்கள் இங்கு மேடையில் உள்ளனா். இதனால் இப் பாடசாலை இலங்கையில் மட்டுமல்ல உலகிலும் சிறந்ததொரு நாமத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதிபரின் அறிக்கையின் படி இக்கல்லுாாி ஆசியா மட்டத்தில பல சாதனைகளையும் கீா்த்திகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -