முஹம்மட் ஜெலீல் நிந்தவூர்-
நிந்தவூர் பிரதான வீதி HNB வங்கிக்கு முன் கல் ஏற்றிவந்த டிப்பர் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நிந்தவூர் அட்டைப்பளத்தைச் சேர்ந்த தம்பதிகளில் ஒருவரான "பிரியா என்ற பெண்ணொருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
குறித்த தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் தனது 5 வயது மகனையும் ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்த பெண்ணின் கணவரும் குழந்தையு பலத்த காயங்களுக்குள்ளானதில் அவர்களை கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -