ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) கொழும்பில் காலமானதாக செய்தி கிடைத்தது.
உண்மையில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பல்வேறு வழிகளிலும் இன்னல்கள் பேரினவாதங்களாலும், அதிகார வர்க்கத்தினராலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களின் உரிமைக்குரலான மு.கா.வின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு மேலுமொரு சோதனை தனது தாயாரின் இழப்பாகும்.
நாபீர் பௌண்டேசன் தலைவர் பொறியியலாளர் யூ.கே. நாபீர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்களும் இந்த இழப்பிலும் துயரத்திலும் பங்கு கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
நாட்டின் இன்றைய இறுக்கமான சூழ்நிலையில் தனது முஸ்லிம் சமுகத்திற்காக பல்வேறு முன்னெடுப்புக்களை எடுக்கவேண்டிய தருணத்தில் இந்த இழப்பும் துயரமும் ஏற்பட்டமையானது அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு பலத்த சோதனை என்பதனையிட்டு மனம் வருந்துகிறோம்.
தனது தாயை இழந்து துயருறும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அன்னாராது குடும்பத்தினருக்கும் மன அமைதியையும், பொறுமையையும் அழ்ழாஹ் வழங்க வேண்டும். அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயாருக்கு அழ்ழாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்தரமான சுவர்க்கத்தை வழங்க பிரார்திக்கின்றோம்.
ஊடகப் பிரிவு,
நாபீர் பெண்டேசன்.