ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
முழு நிலவில் கிழக்கு ஊடக உறவுகளின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் 2017 எனும் தலைப்பில் நேற்று 04.09.2017 திங்கட்கிழமை காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த கிழக்கு ஊடக உறவுகளின் நிகழ்வானது காத்தான்குடியில் வெற்றிகரமாகவும் ஊடக அமைப்புக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் அமைந்திருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
முக்கிய பிரமுகர்களாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்இ பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிஇ முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்இ மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாரூக்இ சுபைர் போன்றவர்களுடன் கிழக்கு மாகாணம் தழுவிய கல்விமான்கள்இ மார்க்க அறிஞர்கள்இ வளர்ந்து வரும் ஊடகவியலாளர்கள்இ சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்கள்இ என பலரும் பிரசன்னமாய் இருந்தமை குறித்த கிழக்கு ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகின்றது.
இராப்போசன விருந்துபசரத்துடன் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது மாலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 4மணி வரையும் இடம் பெற்ற தோடு அமர்வு 1இ அமைவு 2 என பிரிக்கப்பட்டு மிகச் சிறப்பாக கலை அம்சங்களுடனும்இ பட்டிமன்றத்துடனும்இ கெளரவிப்பு நிகழ்விடனும் மியன்மார்-ரோகிங்கிய முஸ்லிம்களின் படுகொலைக்கு எதிரான கையொப்பங்களுடனும் இனிதே நிறைவடைந்தது.
குறித்த ஊடக உறவுகளின் நிகழ்விற்கு முன்னாள் கல்குடா தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் தற்போதைய நாபீர் பெளண்டேசனின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியுமான சாட்டோ வை.எல்.மன்சூர் முக்கிய அனுசரனையினை வழங்கியிருந்தமையும் முக்கிய விடயமாகும்.