மீண்டும் அநாதைகளாய்.....


லைவா !!!
இன்று உன் நினைவு தினமாம்....

என்றும் எம் நினைவுகளில் நீ இருக்க

இன்று மட்டும் எதற்கு ....
அன்றும் இன்றும் என்றும்

நீயே எம் தலைவன்........



தலைவா !!!
எங்கு சென்றாயோ நீ,

நீ வளர்த்த மரம்

இன்று செடியாகப் புதைந்து ...
மயிலாகப் பறந்து ....

குதிரையாக ஓடித் திரிகிறது.

உன் பெயரும் உன் புகைப்படமுமே

இன்று இவர்களின் அரசியல்


உன் கொள்கையும் உன் சிந்தனையும்
உன்னோடு அந்த மரத்தடியில் புதைக்கப்பட்டன.

அன்று நீ செய்த போர்

இன்று இவர்களின் அரசியல் வியாபாரம் .....
இன்று உன்னையே ஆணிவேராக்கி,

அந்த மரநிழலிலே

இன்புறுகிறது இந்தக் கூட்டம் ....



உன் சிந்தனை சிதைக்கப்படுகிறது
உன் கொள்கை மறைந்து போகிறது
உன் தியாகம் அழிக்கப்படுகிறது
உன் பாதை மூடப்படுகிறது......

தலைவா!!!
இன்று மரத்தின் நிழலும் நிஜமில்லை

அதை விதைத்த நீயும் எம்மோடில்லை....
மீண்டும் அநாதைகளாய்

நகர்கிறது எம் நாட்கள் ...



தலைவா!!!
எமக்காய் சிந்தித்த நீ

என்றும் எம் துஆக்களில் ...
மேலான சுவர்க்கம் நீ செல்ல

தினமும் பிராத்திப்போம் இன்ஷா அல்லாஹ்.



அஷ்ரப் அப்துர்ரஹ்மான்

16-09-2017



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -