எப்போது தீரும்....
என்ன பாவம் செய்தோம்
தினமும் கொண்டு குவிக்கிறார்கள்
என்ன வேண்டுமாம் அவர்களுக்கு...
நாடு சுடுகாடு போல
கேட்க யாரும் இன்றி
தினம் நகர்கிறது பொழுது
மரண சத்தம் கொண்டு...
சிறு பிஞ்சுகள் என்று கூட
பார்க்க வில்லை இங்கு
அறுவடை ஆகுது தினம்
உதவிட யாருமில்லை...
என்ன செய்து தலை நாடு
புதினம் பார்க்கிறதா...?
எப்போது தீரும் அவலம்
நிம்மதி பெற்று வாழ...
காவி உடை மொட்டைத் தலையன்
நாசம் செய்கிறான் நாளும்
உயிர்களைக் கொன்று ...
அமைதிப் பூமி தானே
இரத்தத்தில் ஓடுது ஆறு
சிறுவர்களின் மாமிசங்களை
புசித்து...
உக முஸ்லிம் நாடுகள்
குரல் கொடுக்குமா...?
ஷல்மா ஷாஜஹான்,
வாழைச்சேனை.