முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து நடவடிக்கை எடுக்காததால், அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கூடிய அமைச்சரவையயில், கடந்த கால ஊழல் மோசடிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த கால குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியுள்ளதென அமைச்சர்கள் சாடியுள்ளனர்.
அரசாங்கம் விரைவில் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், இவ்வாறான செயற்பாடுகளால் மக்களிடம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசாங்கம் இது குறித்து சிந்தித்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் அமைச்சரவையில் கலந்துரையாடியுள்ளனர்.