சப்னி அஹமட்-
கிழக்கு மாகாணசபையை காலம் முடிந்ததும் கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூதூர், தக்வா நகரில் 5.5 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையமும், தோப்பூர் பிரதேசத்தில் 5.5 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று (15) இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்வைத்தியசாலைகளை திறந்து வைத்தார்.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ;
கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் கிடைக்காமல் கிழக்கு மாகாணசபையை நீடிக்கும் முடிவினை நல்லாட்சி அரசு எடுத்தமை ஏற்கக்கூடிய வகையில் இல்லை எனவும் அரசு மாகாணசபைகளை நீடிக்கும் காலத்தை 02 வருடமாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது. எது எவ்வாற இருந்தாலும் சபைகளுக்கு காலம் முடிந்தால் சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதே சிறந்தது.
மாகாண சபைகளுக்கு நிதிப் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது. அவ்வாறா இருக்கும் போது மாகாண சபைகள் ஊடாக பலவகையான இடர்பாடுகள் உள்ளன அவ்வாறக இருக்கும் போது மாகாண்சபைகளை பெயருக்கு மாத்திரம் இயங்கக்கூடியவாறு அமையக்கூடாது. அது போல் வெறும் அதிகாரம் அற்ற சபையாக இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எனவும் அதிகாரம் உள்ள சபைகளை நீடிப்பதில் அர்த்தம் உள்ளது எனவும் இங்கு அமைச்சர் தெரிவித்தார்.