
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த போது “கிழக்கின் உதயம்” மற்றும் “தெயட்ட கிருல்ல” போன்ற திட்டங்களினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாய் நிதியில் அல் அமீன் வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இப்பணிகளை மிக விரைவில் பூர்த்தி செய்வதற்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேலும் 5 மில்லியன் ரூபாய் நிதியை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அண்மையில் கட்டிட நிர்மாண வேலைகளை பார்வையிட அல்அமீன் வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், அங்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களை சந்தித்து மேலதிக தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதற்கமைவாக பாடசாலைக்கான வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கும் தான் பங்களிப்பு வழங்குவதாகவும் இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.