எம்.எஸ்.நூர்தீன் -
கி ழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச தொழில் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 45ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் (3.8.2017) புதன்கிழமை மாலை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகமவுடன் (3.8.2017) புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த வயதெல்லையை அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைதச்சர் குறிப்பிட்டார்.
வேலையில்லா பட்டதாரிகளில் பலர் 45 எனும் வயதெல்லையில் இருப்பதால் அவர்களுக்கு அரசாங்க தொழில் கிடைக்கும் வகையில் இந்த கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுனரிடத்தில் முன் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன் அத்தோடு இவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான வயதெல்லையாக 45ஆக அதிகரிக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுனர் கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச தொழில் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லையை 45 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆளுனரின் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை (4.8.2017) வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் முன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்படும் போது வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்படல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.