க.கிஷாந்தன்-
தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை மாற்றியுள்ளார் நுவரெலியா இளைஞர் ஒருவர். நுவரெலியா களுகெலை பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த ருவான் குமார (வயது 31) என்ற நபரே இவ்வாறு தானியிக்க முச்சக்கரவண்டியை கண்டுபிடித்தவராவர்.
இவர் முச்சக்கரவண்டியை (ரிமோட் கொண்ரோல்) ஊடாக இயக்க கூடிய வகையில் 5 நாட்களில் இதனை தயாரித்துள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும். இயந்திரவியல் தொழிலில் ஈடுப்பட்டுள்ள இந்த நபர் தனது எரிபொருள் ஊடாக ஓட்டம் எடுக்கும் முச்சக்கரவண்டியை (ரிமோட் கொண்ரோல்) ஊடாக இயங்க வைப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி பலனளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பார்வையாளர்களாக கூடியிருந்த அணைவரினதும் கவனத்தை ஈர்த்த விடயமாக இருந்தது.
தனது சொந்த செலவில் தன்னிடம் உள்ள முயற்சியை கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த முச்சக்கரவண்டியைப் போல எதிர்காலத்தில் இன்னும் பல (ரிமோட் கொண்ரோல்) மூலம் கட்டுப்படுத்தக் கூடிய இயந்திரங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும், அதற்கான பொருளாதார ரீதியில் உதவிகளை செய்யுமிடத்து இன்னும் பல்வேறு வகையான தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளைக் கண்டுபிடிக்க முடியும் எனவும் எமது ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போது சமிந்த ருவான் குமார தெரிவித்தார்.