எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்வியமைச்சின் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களைத்துப்புரவு செய்யும் பணி நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள பாடசாலைகள், அரச நிறுவனங்களில் இடம்பெற்று வருகின்றன.
இவ்விஷேட நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று 28.07.2017 ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப்பணிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், வாழைச்சேனைப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.நெளசாத் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு நோயினால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் அதனைக்கட்டுப்படுத்த வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப்பணிகள் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.