எல்லா வகையிலும் பாதிக்கப்பட்ட ஒலுவிலை கட்டியெழுப்ப. முழு அரசியல் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் வருகையினால் இலங்கையில் தனிப்பட்ட முறையில் தேசிய அபிவிருத்தியில் முற்று முழுதாக பாதிக்கப்பட்ட ஊர் ஒலுவில்.
நான் அறிந்த வகையில் இலங்கையில் நான்கு பக்கங்களாலும் எல்லைகளால் சூழப்பட்ட ஒரேஊர் ஒலுவிலாகும்.
தெற்கிலே துறைமுக சுவரும், வடக்கில் பல்கலைக்கழக சுவரும், கிழக்கில் பாறாங் கற்கள் போடப்பட்ட கடலும், மேற்கிலே தொல்பொருள் ஆராச்சி நிலைய வேலிகளும் காணப்படுவதனால். ஒரு அங்குல நிலப் பரப்பளவும் கூட விஸ்தரிப்பு செய்வதற்கான வாய்ப்பு அங்கில்லை.
இதையெல்லாம் ஏன் இந்த மக்கள் இழந்துள்ளார்கள் என்றால். முஸ்லிம் காங்கிரஸ் ஏற்படுத்திய தேசிய அபிவிருத்தியினாலே என்பதே உண்மை.
இதனால் பலகோடிகள் பெறுமதியான நிலங்களையும் தொழில்களையும் இழந்து நிர்கதியாய் இருக்கின்ற வேளையிலே. இலங்கையில் எந்த மூலையில் இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அரசியல் செய்ய வருபவர்களுக்கு. மிகப் பாரிய பங்களிப்பை ஒலுவிலை மையமாக வைத்தே நகர்தப்படுகிறது.
அதனால் எந்த கட்சினூடகவும் அரசியல் அங்கிகாரம் கொடுக்கப் பட்டாலும். அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம் காங்கிரஸாக இருக்கட்டும். அரசியல் அதிகாரத்தில் உச்ச கட்டம் வழங்கப்பட வேண்டிய ஊர் ஒலுவிலாகும்.
ஏனென்றால் முதன் முதலிலே இலங்கை வரலாறிலே முஸ்லிம் காங்கிரஸிக்காக வேண்டி பகிரங்கமாக ஒரு ஜும்மா பள்ளி வாசலை திறந்து கொடுத்து முழு ஆதரவையும் கொடுத்த ஊர் ஒலுவில்தான்.
அதுமட்டுமா எந்த பணத்தையுமே பதவியுமே எதிர்பார்காமல் கட்சியை வளர்ப்பதற்காக தனது முழு பொருளாதாரத்தையும் செலவு செய்து. கட்சியை நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல தோளோடு தோழாக நின்று உழைத்தவர். ஒலுவில் மர்ஹூம் நூஹு லெப்பை என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
இந்த ஊர்மக்கள் தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு சுமார் 300 ஏக்கர் நிலமும், துறைமுகத்துக்கு 250 ஏக்கர் நிலமும், கலரிப்பு காரணமாக சுமார் 50 ஏக்கர் நிலமும், பேரினவாதிகளால் பொண்ணம் வெளி வயற்காணி 350 ஏக்கர், பால் கேணி 460 ஏக்கர், தொல் பொருள் திணைக்களத்தால் 50 ஏக்கர் இப்படியே கிட்ட தட்ட 1460 ஏக்கர் காணிகளை இழந்துள்ளார்கள் ஒலுவில் மக்கள்.
அத்தோடு மட்டும் நின்று விடவில்லை ஏழை மக்களின் 16 உயிர்களைக் கூட கண் முன்னே சுட்டுக் கொன்றார்கள். ஆலிம் நகரில் (1990) காலப்பகுதிகளில் திட்டமிட்டு செய்தார்கள்.
மொத்தமாக இலங்கை விகிதாசாரப்படி ஆகக் கூடுதலான நிலப்பரப்பை இழந்துள்ளார்கள் ஒலுவில் மக்கள்.
அதுமட்டுமா முதுகெலும்பாக நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மீன்பிடியை கூட இழந்துள்ளார்கள். இப்படியெல்லாம் இழந்த அந்த மக்களுக்கு காலத்துக்கு காலம் தேர்தல் காலங்களில் சில முகவர்களை ஏவி விட்டு.
அவர்கள் மூலம் சில கோதுமை மாவு மூடைகளை (பறாட்டா) அங்கிருந்து அனுப்பி விட்டு அப்பாவி மக்களின் வாக்குகளை நரி தனமாக சூரையாடுகின்ற வழக்கத்தை "கைகண்ட கலையாக" பாவித்துக் கொண்டிருப்பது ஊருக்கு செய்யும் மிக பெரிய துரோகம் என்பதைவிடவும். சாபமென்று கூறுவதே சிறந்தது.
அப்பாவி மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கான ஜீவணோபாய தொழில்களான கடற் தொழில், நண்ணீர் மீன் பிடிப்பு, பன்னலை(பாய் பின்னுதல்), தென்னை ஓலை பின்னுதல்(கிடுகு), தும்பு தொழில் இப்படி எத்தனையோ கைத்தொழில்கள். என்ன நடந்தென்று கூட கற்பனை பன்ன முடியாதளவுக்கு இழந்து. செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்" என்பது போல்.
மக்களின் வாக்குகளை சூரையாடியவர்கள். அதற்கு துணை இருந்தவர்கள் ராஜபோக வாழ்கை வாழ்வது மட்டுமல்ல. நாங்கள்தான் எல்லாம் எங்களை விட்டால் யாருமில்லை என்று வீரப்பு வசனம் வேற பாடுகிறார்கள். இது வேகலமாக தெரிய வில்லையா இவர்களுக்கு ?
இப்படியெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களின் எஞ்சிய நிலங்களை கூட அவர்களின் இயலான்மையை பயன்படுத்தி. வெளி ஊர்களில் இருந்து வசதி படைத்தவர்களை கூட்டி வந்து பெரும் தொகைகளைக் கொடுத்து கொள்வனவு செய்கிறார்கள்.
அதற்கு சில உள்ளூர் முகவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ள யாருமில்லை.( அவர்களின் காணிகளை அவர்களுக்கு விற்பதற்கு அனுமதியுண்டு. இல்லையென்று சொல்ல வில்லை)
ஆனாலும் இப்படியே போனால் எதிர்காலத்தில் ஒலுவில் என்ற ஊர் பறிகோகுமா? என்பதும் சந்தேகமே.
இது அவ்வாறு இருக்க தேசிய பட்டியல் பிரச்சினை அண்மைக் காலங்களாக சூடு பிடித்துள்ள விவாதங்களாக வலம் வருவதை காண முடிகிறது.
அது நியாமானதுதான் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.
ஆனாலும் உண்மையாக எல்லா வகையிலும் அழிந்து போன ஒலுவிலை மீண்டும் கட்டியெழுப்ப. பூரணமான முழு அரசியல் அங்கிகாரத்தையும் அந்த ஊருக்கு கொடுக்க மறுத்து வருவது ஏன்?
இனியும் அந்த ஏழை மக்களின் உணர்வுகளில் விழையாடா எவருக்கும் இடம் கொடுக்காமல். முழு அரசியல் அதிகாரத்தையும் கொடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அப்போதுதான் எதிர்காலத்திலாவது ஒலுவில் கிராமத்தை அழிவுகளில் இருந்தும். தீய சத்தியினர்களின் பார்வையில் இருந்தும் பாதுகாத்து. வருங்கால சந்ததினர்களாவது நின்மதியாக தலை நிமிர்ந்து வாழ்வதற்கு. வளமிக்க ஊராக கட்டியெழுப்ப முடியும்.
அதற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களினதும் கடமையாகும்.
இளைஞர்களே உலகில் உள்ள அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல. விடாமுயற்சியினால் தான் என்பதை மறக்க வேண்டாம்.
நாம் ஒன்றும் சாதனை செய்ய வேண்டியதில்லை. நானா? நீயா? என்பதை விட்டுவிட்டு ஊரை நல்ல நிலைக்கு கொண்டு வருவோம். அதுவே எதிர்கால பிள்ளைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சாதனையாகும்.