கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கோரிக்கை்கு இணங்க கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கிழக்கு மாகாண உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் இதன் போது கலந்து கொண்டனர்,
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
கிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் விவசாயம் சார் துறைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தின் கலந்துரையாடப்பட்டது, அத்துடன் கிழக்கு மாகாணத்திலும் விமான சேவையினை விஸ்தரிப்பது தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் கலந்துரையாடியதுடன் மாகாணத்தின் வீதிக்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம், அத்துடன் மத்தளை தொடக்கம் அம்பாறை வரையான பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து தொழில்வாய்ப்புக்களை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.
கப்பல்துறையில் கைத்தொழில் வலயமாக மாற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் கிழக்கில் ,தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான திட்டங்களையும் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளோம், அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்புடன் முக்கிய முதலீட்டாளர்களை கிழக்கிற்கு அழைத்து வந்து சுற்றுலா முக்கித்துவம் மிக்க இடங்களில் முதலீடுகளை முன்னெடுத்து அதன் மூலம் கிழக்கின் வேலையற்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளோம்.
எனவே கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான அம்பாறை,மட்டக்களப்பு திருகோணமலை ஆகியவற்றை அபிவிருத்தி செய்து நாட்டின் முன்னேற்றகரமான மாகாணமாக கிழக்கு மாாகாணத்தை மாற்றியமைப்பதற்கான சகல திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம்.
எனவே எமது மாாகணத்தின் அபிவிருத்தியை மையப்படுத்தி எமது கோரிக்கைக்கு செவியேற்று இங்கு வருகை தந்த கௌரவப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார், இதன் போது சர்வதேச முதலீட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.