கொக்கேன் சம்பவத்திற்கும் சதொசவிற்கும் தொடர்பு இல்லை - பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு-
கொக்கேன் சம்பவத்திற்கும் சதொச நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, பாராளுமன்றத்தில் இன்று (20.07.2017) எழுப்பிய வாய் மூல வினாவிற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் இறக்குமதி செய்யவில்லையெனவும் தனியார் வழங்குனர் மூலமே இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

சீனிக் கொள்கலனில் கொக்கேன் இருந்ததை கண்டுபிடித்த சதொச ஊழியர்களே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இப்போது அந்த விடயம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணை முடிவுபெறும் வரை, இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து சதொச நிறுவனம் எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்வதை, தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -