மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தலைவர்கள் 400 பேருக்கு சமாதான நீதவான் பதவிகளை வழங்க நீதி மற்றும் பௌத்த மத விவகார அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு புத்தசாசன அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் 49 பேர் மகா சங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லையெனவும், ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்களுடன் இணைந்து செயற்படுவோரிலிருந்து செய்யப்பட்டவர்களே காணப்படுவதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
