அன்று நோன்பில் ஹிஜாபைக் கிழித்த சென்னை சில்க்ஸ் இன்று எரிந்து சாம்பலானது.!

எஸ்.ஹமீத்-
து 2015 ம் ஆண்டு ஜூலை மாதத்தின் ஒருநாள்... ! புனித ரமழான் மாதத்தின் நடுப்பகுதி. வரப்போகும் பெருநாளைக்கு உடைகள் வாங்கும் நோக்கில் சென்னை, தியாகராயநகர், உஸ்மான் ரோட்டிலிருக்கும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான காட்சியறைக்குச் சென்றார் அந்த முஸ்லிம் பெண். அவ்வாறு சென்ற அந்த ஹிஜாபணிந்த முஸ்லிம் பெண்மணியின் மீது அங்கிருந்தவர்களினால் வேண்டுமென்றே திருட்டுக் குற்றம் சுமத்தப்படுகிறது. அத்தோடு அந்தப் பெண் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுகிறார். அவர் அணிந்திருந்த புர்கா கிழிக்கப்படுகிறது. அவர் வாய்விட்டு அழ, அழ அடிஅடியென அடித்து நடுவீதியில் தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார். அந்தக் கொடுமையான காட்சியைக் கண்டு பார்ப்போர் உள்ளங்கள் பதறித் துடிக்கின்றன. ஆயினும், யாராலும் அந்தப் பெண்ணுக்கு உதவ முடியாத நிலை.

அந்தப் பெண் திருடவில்லை என்பது அப்போதே சென்னை சில்க்சின் CCTV கமராவில் பதிவாகியிருந்ததாக அங்கிருந்தோரும், அருகிருந்தோரும் தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்குச் சில நாட்களின் பின்னர் சில காவி சங்பரிவார்களின், இந்துத்துவ வெறியர்களின் மற்றும் சிவசேனா ஆதரவு பெற்றவர்களின், RSS அடிமைகளின் முகநூல் பக்கங்களில் அந்த முஸ்லிம் பெண் திருடுவது போன்ற காட்சி அடங்கிய வீடியோ பதிவேற்றப்பட்டும் பகிரப்பட்டும் இருந்தது. உண்மை நிலையென்னவென்பதை அறிந்தவன் அந்த அல்லாஹ் மட்டுமே!

''எனது மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன்!'' என்று சொல்லிய இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வழிவந்தவர்கள் நாம். யார் திருடினாலும் அதற்கு நாம் ஆதரவளிக்கப் போவதில்லை. ஆனால், களவே செய்யாத ஒரு பெண்மணியை அவர் இஸ்லாமியர் என்பதற்காகக் கள்ளியென்னும் பட்டம் சூட்டி, அடித்து, அவமானப்படுத்தியது நமது நெஞ்சங்களிலும் நம்மைப் போன்ற பல இலட்சம் மனிதாபிமான இதயங்களிலும் பெரு நெருப்பை அள்ளிக் கொட்டியிருந்தது. அந்த நெருப்பு...

இதோ இரண்டாண்டுகள் கடந்து அதே ரமழான் மாதமொன்றில் சென்னை சில்க்சைக் கொளுத்திச் சாம்பலாக்கியிருக்கிறது. அல்லாஹு அக்பர்!

அப்பாவிப் பெண்ணொருவர் மீது ஒரு புடவை திருடியதாகப் பழி சுமத்தப்பட்டதற்குப் பகரமாக ஓர் இலட்சங்களுக்கும் மேலான பட்டுப் புடவைகள் பற்றியெரிந்து பஸ்பமாகப் போயிருக்கின்றன. அவர் புர்கா கிழிக்கப்பட்டதற்குப் பதிலாக அந்த பிரமாண்டமான கட்டிடமே நெருப்பால் அழிக்கப்பட்டிருக்கிறது. சுப்ஹானல்லாஹ்!

உண்மையிலேயே இதற்கு மேலும் எழுதுவதற்கு எனக்கு முடியாமலிருக்கிறது. இறுதியாக, ஒருவர் மீது வீணான பழி சுமத்துவதில் நின்றும், இன்ஷா அல்லாஹ்...தவிர்ந்து கொள்வோம்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -