அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் மீள்குடியேற்ற அதிகார சபை மூலமாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் பாலர் பாடசாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நூர்டீன் மசூர் அவர்களின் நினைவாக அமைச்சரினால் காட்டப்படும் இப்பாடசாலை கட்டிடத்திற்கு நூர்டீன் மசூர் பாலர் பாடசாலை என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பப்பணிகளுக்கான வேலைகள் ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் என்.எம், முஜாஹிர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு RDS அமைப்பினரும் WRDS அமைப்பினரும் மதகுரு மார்களும் பள்ளி நிருவாகிகளும் மற்றும் கிராம அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.