நடிகர்கள் தலைவராக உள்ள வரை நாம் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ளேதான்..!

கடைக்காயாய் பாவிக்கப்பட்ட முஸ்லீம் சமுகம் இன்று தனக்கு தானே அடிமைச்சாசனம் எழுத நாடகம் அரங்கேறுகிறது. நல்லாட்சி உருவாக்க துணை நின்றோர். மைதிரி பால சிறி சேன ஜனாதிபதி ஆனார் ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.க) பிரதமர் ஆனார் சந்திரிகா மகிந்த ராஜபக்சவின் எதிரி வீட்டுக்கு அனுப்பினார் சரத் பொன்சேகா பாராளுமன்ற தேர்தலில் தோற்றும் அமைச்சரானார் ஹிருனிகா தந்தையின் படு கொலை தொடர்பில் துமிந்த சில்வாவை பழி வாங்கி தான் பாராளுன்றம் சென்றார். ராஜித, துமிந்த மகிந்தவை பழி வாங்கி எம்.பி களாகவும் அமைச்சராகவும் கட்சிகளின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். 

முஸ்லீம் தலைவர்கள் பணமும் தாம் விரும்பிய பதவியும் பெற்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தம் அரசியல் எதிரிகளை சிறையில் தள்ளியது தமது இனத்தின் எதிரி மகிந்தவை அதிகாரம் இழக்க செய்தமை நாட்டின் எதிர் கட்சியாக அமர்ந்து கொண்டது தமது சமுத்தின் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவு செய்கிறது மலையக தமிழ் தரப்பு தமது அமைச்சு பொறுப்புகளையும் பாராளுமன்ற பிரதிநிதிதவத்தையும் காப்பாற்றினர். சம்பிக ரணவக்கவின் ஹெல உறுமய அரசின் பங்காளி அமைச்சர் ஞானசாரவை உருவாக்கி அதை இயக்கும் பணி தங்கு தடையின்றி தொடர்கின்றது. 

இந்தியா, மேற்குலகம் தமது நாடுகளில் அமுல்படுத்துகின்ற வரி உள்ளிட்ட அணைத்து விடயங்களையும் தங்கு தடையின்றி இந்த நாட்டு மக்களின்விருப்பத்துக்கு செய்கின்றது நாடு அந்த நாடுகளின் துணை மாநிலங்களா மாறி ஸ்திர தன்மை இழந்திருக்கிறது. முஸ்லீம் சமுகம் பள்ளிகள் உடைப்பது வேகமாக தொடர்கிறது கோடிக்கணக்கான பெறுமதியான கடைகள் ஒவ்வொரு இரவும் தீக்கிரையாகிறது நில அபகரிப்பு தொடர்கிறது தாஜூதீன், அழுத்கம கலவரம், வில்பத்து என ஏதும் தீர்க்க பட வில்லை. 

ஞானசாரவின் அட்டகாசங்களும் அல்லாஹ்வை பற்றியும் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை பற்றியும் குர்ஆனை பற்றியும் அவதூறுகளும் இன வாதமும் முழங்குகிறது. ஆளில்லா இடங்களில் சிலை வைப்பும் அமைச்சர்களின் நேரடி ஒத்துழைப்பும் தொடர்கிறது. கூரையேறிய கோழி புடிக்க நாதியற்ற தலைவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் காணப் போவதாக மக்களை சூடாக்கி அரசியல் லாபமடைய கொக்கரிப்பது இன்னும் குறைய வில்லை. இறுதியாக சிங்கள பேரினவாதம் எனும் பயன்படுத்த படுகின்ற ஞானசார எனும் தீ எம்மை வடக்கு கிழக்கை இணைத்து அடிமையாக்கும் வரை தொடரும். 

நடிகர்கள் தலைவராக உள்ள வரை நாம் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்திருப்பதை உணருவோமா?

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -