நுகேகொட பகுதியில் முஸ்லிம் கடைகளை எரியூட்டி நாசப்படுத்த முயன்ற நபர் மஹரகமயைச் சேர்ந்த பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என தகவல் அறியமுடிகிறது. அதிகாலையில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த நபர், மஹரகமயைச் சேர்ந்த 33 வயது வன்னியாராச்சிகே கசுன் குமார என்பவர் என்பதோடு குறித்த நபர் பொது பல சேனாவின் உறுப்பினராகவும் செயற்பாட்டாளராகவும் அறியப்பட்டுள்ளது.
தெஹிவளையில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நபரே இவ்வாறு முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தேடிக் குறிவைத்துள்ளதாக சோனகர்.கொம்முக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. கைதான நபர் தானே நான்கு கடைகளுக்குத் தீ வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.