மலேசிய எதிர்க்கட்சிக் குழுவினர்; மு.கா.வுடன் தாருஸ்ஸலாமில் சந்திப்பு..!

ஏ.ஆர்.எம்.பர்வீன்-
லேசியாவிலிருந்து இலங்கை வந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியில் பிராதான பங்காளிக்கட்சியாக அங்கம் வகிக்கும் மலேசிய அமானா கட்சியின் தலைவர் முஹம்மது மத் சாபு தலைமையிலான குழுவினர் திங்களன்று (15) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களை சிநேகபூர்வமாக சந்தித்தனர். இந்தச்சந்திப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. மலேசிய சார்பில் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைதீன், தொழிலதிபர் பஷீர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா,எம்.எச்.எம் .சல்மான் மேல்மாகாண சபை உறுப்பினர் அரசாத் நிஸாம்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் அணி அமைப்பாளர் திருமதி சித்தி ரிபாயா இப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமகால அரசியல் நிலவரம், முஸ்லிம் சமூகம் சர்வதேசத்தில் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள், இலங்கை,மலேசிய முஸ்லிம் மக்களின் கல்வி,கலாச்சார விடயங்கள் என்பன இந்தக்கலந்துரையாடலின் போது பரஸ்பரம் பகிர்ந்து கொல்லப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திட்கான முன்னெடுப்புகள் பற்றியும் பேசப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -