உலக முஸ்லிம்களின் பார்வைக்கப்பால் பாரிய அநீதிக்குற்ப்படுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கமாக இன்று மேற்கு சீனப்பகுதியின் கிழக்கு துருக்கிஸ்தான் சிங்ஸியாங் மாகாணத்தில் வாழும் "உய்கூர்" முஸ்லிம்கள் காணப்படுகின்றனர் .
வெறிபிடித்த சீன இராணுவத்தின் அழிக்கப்பட வேண்டிய இலக்காக இன்று உய்கூர் முஸ்லிம்கள் காணப்படுவது மிக வேதனைக்குரிய ஒரு உண்மை .
சீனாவின் சிங்சியாங் மாகாண ஆக்கிரமிப்பும் ,அம்மக்களின் மீதான கொடூர தாக்குதலும் இன்று உருவான கதையல்ல . இம்முஸ்லிம்கள் 1863 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே பல இன அழிப்பு நடவடிக்கைகளையும், சித்திரைவதைகளையும் சந்தித்து வருகின்றனர் .
அந்தவகையில் 1949 காலப்பகுதியில் மா ஓ சேதுங்கின் கம்யூனிச அரசு சிங்சியாங் மாகாண உய்கூர் முஸ்லிம்களின் சுதந்திரமான வாழ்க்கை நிலையை சீர்குலைத்து அம் மக்களுக்கெதிரான மிகப்பெரும் வன்முறைகளையும் கட்டவிழ்த்திருந்தது.
அக்காலப்பகுதியில் ஏற்பட்ட கலகங்களில் மாத்திரம் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்கூர் முஸ்லிம்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு ,அதைத்தொடர்ந்து அப்பகுதி சீனக் குடியரசோடு இணைக்கப்பட்டு அங்கு காணப்பட்ட முஸ்லிம்கள் சீனாவின் உள் மாகாணங்களில் பலவந்தமாகவும் திணிக்கப்பட்டனர் .ஆனால் உறுதிமிக்க உய்கூர் முஸ்லிம்கள் இந்நடவடிக்கையை எதிர்த்து நின்றதோடு புரட்சிகளையும் செய்தார்கள் .
சீனா என்ற கொடிய விஷப்பாம்பின் விஷத்தை உமிழும் இடங்களாக உய்கூர் முஸ்லிம்களின் பள்ளிவாயல்களும் காணப்பட்டுள்ளன .1949 ம் ஆண்டில் மாத்திரம் சுமார் 25 000 பள்ளிவாயல்களை இந்த நாசகார அரசு உடைத்தொழித்துள்ளது .
இன்று சீனப்பொருளாதாரத்தில் பாதியளவு கம்யூனிசம் கைவிடப்பட்டிருந்தாலும் ,குறிப்பாக இளைஞர்களிடம் இஸ்லாமிய மதத்தை பிரதிபலிப்பு செய்யும் அடையாளங்கள் காணப்பட்டால் கூட அவற்றையும் சீன அரசு தன் இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வருகின்றது .
சிங்சியாங் மாகாணத்தின் இயற்கை வளமாக எண்ணெய் கானப்படுவதால் சீன அரசானது அவ்விடத்திலிருந்து உய்கூர் முஸ்லிம்களை அப்புறப்படுத்தி; உள் சீனப்பகுதிக்குள் அவர்களை திணித்து ;அங்கு ஹன் இன சீனர்களை குடியமர்த்தியுள்ளது . இன்று காணப்படும் பத்து மில்லியன் உய்கூர் முஸ்லிம்களை அதாவது அவர்களுள் நாற்பது வீதமானவர்களை மாகாணத்தின் தெற்கு ,மற்றும் சில கிராமிய பகுதிகளிலும் திணிக்கும் நிலை அதிகரித்தும் வருகின்றது .
சீன அரசின் அடாவடித்தனங்களுக்கும் ,அத்துமீறல்களுக்கும் மத்தியில் உய்கூர் மக்களின் இஸ்லாமிய வேட்கை குறைவடையவுமில்லை ,அவர்கள் தளரவுமில்லை . அம்மக்கள் இஸ்லாத்தை அவர்களின் வாழ்வில் உயிர்ப்பிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர் .
இஸ்லாத்தின் வருகைக்கு பயந்த சீன அரசு தொடந்தேர்ச்சியாக பல படுகொலைகளையும் ,தாக்குதல்களையும் புரிவதோடு ஊடகங்களின் பார்வையிலிருந்தும் அவற்றை மறைத்தும் வருகின்றது . உயிர்தப்பி வெளியேறி வெளிநாடுகளிலிருந்து குரலெழுப்புபவர்களையும் ஏனைய நாடுகளின் பாதுகாப்பு பிரிவினர்களை பயன்படுத்தி தீவிரவாதம் என்ற பெயரில் கைது செய்தும் வருகின்றது .உதாரணமாக பாகிஸ்தான் ,மத்திய ஆசிய நாடுகளின் படைப்பிரிவுகள்.
உய்கூர் மக்கள் இஸ்லாத்தில் காண்பிக்கும் ஆர்வம் ,அவர்கள் நிர்மாணிக்கும் பள்ளிவாயல்கள் ,அம்மக்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் இஸ்லாமிய சிந்தனைகள் சீன அரசிற்கு பீதியை உண்டுபண்ணியதால் ,சீனா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பல அட்டூழியங்களையும் இன்றளவிலும் புரிந்து வருகின்றது.
அவற்றுள் அம்மக்களின் கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்தல் ,ரமழான் கால நோன்பை நோற்க தடைவிதித்தல் ,நோன்பு காலத்தில் உணவகங்களை திறக்க நிர்ப்பந்தித்தல் ,தாடி ,ஹிஜாப் அணிவதை குற்றமாக அறிவித்தல் இஸ்லாமிய அடையாளங்களை வெளிக்காட்டும் முகமாக செயற்படுபவர்களை பற்றிய தகவல்களை தெரியப்படுத்துவோருக்கு சன்மானம் வழங்குவதாக பத்திரிகைகளில் அறிவித்தல் ,சிறைப்பிடித்தல் என்பன உள்ளடங்கும் .
மேற்க்கூறப்பட்டுள்ள அவதானங்களின் பிண்ணனியில் கடந்த 2.03.2017 அல்ஜஷீரா ஊடக செய்தி அடிப்படையில் கிழக்கு துருக்கிஸ்தான் சிங்சியாங்கில் பட்டாளமிட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான இராணுவம் ,பல இராணுவக்கக்கேடயங்கள் ,ஹெலிகாப்டர்ஸ்களுடன் கூடிய இராணுவ குவிப்பானது உய்கூர் முஸ்லிம்களின் மீது சீனா வின் அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கையை எடுத்துக்காட்ட கூடிய வகையில் அமைந்துள்ளது. தான் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் அத்தனை அநீதிகளுக்கும் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் சீன அரசு நியாயம் கற்பிக்கவும் செய்யும் .
இதில் மிகக்கசப்பான உண்மை மில்லியன் கணக்கான முஸ்லிம்களுக்கு நடக்கும் அநீதிகளை அறியாமலே உலக முஸ்லிம் உம்மத் இருப்பதுதான். அதற்கு காரணம் பல தேசங்களாக பிளவுபட்டு உம்மத் கூறு போடப்பட்டிருப்பதும், ஒரே தலைமைத்துவமான கிலாஃபா அரசு முஸ்லிம் உலகில் இல்லாமல் இருப்பதுமே ஆகும் .
இலங்கையில் இடதுசாரி அரசியல் கட்சிகளின் முதலாளித்துவ எதிர்ப்பு வாதங்களால் கவரப்பட்டு ,ஷைத்தானிய கம்யூனிசத்தீர்வை சுமந்து நிற்கும் அவர்களின் பின்னால் அணிதிரள அதீத ஆர்வம் காட்டும் கற்ற சமூகம் உய்கூர் முஸ்லிம்களிடமிருந்து கற்கவேண்டியதை கற்று இஸ்லாத்தின் பால் திரும்ப வேண்டிய தேவையுள்ளது.
முஹம்மட் நப்ராஸ்-
