கடந்த வெள்ளிக் கிழமை அன்று அதாவது 12-05-17 ம் திகதி கல்குடா தொகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இளைஞா்களை வலுவுட்டல் மாநாடு நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்று கல்குடா ஞானம் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வை.எல் மன்சூர் என்பவர் கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழ் அவர்களை கொச்சையாக உதாரணபடுத்திய விடயம் தற்போதய கல்குடா அரசியல் கள நிலவரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளதை நாம் அறிந்ததே.
இந்த விடயம் தொடர்பாக பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் சகோதரர் அறிவிப்பாளர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களும் ஒரு ஆக்கத்தை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை வாசிக்கும் ஒரு சிலருக்கு றியாழ் மீது அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் பரிதாபப் படுவதாக விளங்கலாம். ஆனால் அவரின் கருத்துக்கள் பரிதாபப் படுவது போன்று றியாழ் அவர்களை மட்டம் தட்டுவதாகவே உள்ளது.
அவரின் பதிவில் அவர் சுட்டிக் காட்டிய விடயமொன்று இலங்கையில் பல்லாயிரக் கணக்கான பட்டய கணக்காளரில் றியாழும் ஒருவர் என குறிப்பிடுகிறார். இதன் மூலம் பட்டயக் கணக்காளர் பதவி என்பது சந்தையில் மலிவு விற்பனையில் காணப்படும் பொருள் அதற்கு பெறுமதி இல்லை என்பதையே அவர் இங்கு மறைமுகமாக சொல்வதற்கு முற்படுகிறாரோ என்னவோ.......?
இலங்கையிலுள்ள பட்டயக் கணக்காளர்களை பொருத்தவரை இலங்கையின் ஒட்டு மொத்த சனத் தொகை அடிப்படையில் 20,359,439 (2012)ம் ஆண்டில் பட்டயக் கணக்காளர்கள் 6000ம் பேர்தான் உள்ளார்கள். அத்துடன் கல்குடா தொகுதியில் முதலாவது பட்டயக்கணக்காளராக ஒருவர்தான் தற்போதும் இருந்து வருகிறார். அவர்தான் றியாழ் ஆவார் என்பதில் எமது மண் பெறுமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
அது மாத்திரமில்லை பட்டயக்கணக்காளராக வெளிவருபவர்கள் உலகளவில் பாரிய வர்த்தக நிறுவனங்களில் உயர் பதவிகளில் அதிகளவான சம்பளங்களிலயே நியமிக்கப் படுகிறார்கள். என்பதுவே இந்த பட்டயக் கணக்காளர் துறையானது சர்வதேச அளவில் எவ்வளவு முக்கியத்துவமிக்க ஒன்றென்பதை என்பதை நாம் அறியலாம். அந்த வகையில் றியாழ் அவர்களும் பாரிய வர்த்தக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
அது மாத்திரமன்றி கணக்கறிஞர் றியாழை இன்னும் தரக் குறைவாக சுட்டிக் காட்டுவதற்கு அவர் அரசியலுக்கு வரும்போதும் கணக்கறிஞர் என்றே ஊர் மக்கள் அழைத்தார்களாம் அவ்வாறே இப்போதும் அவரின் ஆதரவாளர்கள் அழைத்து வருகின்றார்களாம். அப்போதே மக்கள் கணக்கறிஞர் என்று அழைக்கும் போது றியாழ் அவர்கள் அதனை சுதாகரிச்சிரிக்க வேண்டும் என்று அறிவிப்பாளர் அஷ்ரப் சிஹாப்தீன் குறிப்பிட்டு கூறுவதன் மூலம் அவர் இங்கு மறைமுகமாக எதை சொல்ல வருகிறார் என்றால் கணக்கறிஞர் என்று ஒரு பட்டம் றியாழுக்கு கிடையாது மாறாக அது மக்களாகவே வைத்த பட்டமே என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
ஆனால் எதார்த்தம் அவ்வாரில்லை பட்டயக் கணக்காளர் கல்வியை பூர்த்தி செய்பவர்களுக்கு கணக்கறிஞர் பட்டத்தை வழங்கும் உரிமை யாருக்கு உண்டு என்றால் இலங்கை பட்டயக் கணக்கறிஞர் கழகம் (INSITIUTE OF CHARTERED ACCOUNTANTS OF SRILANKA/ICASL) க்கே ஆகும் அதுவே இலங்கையில் உள்ள தொழில் சார் கணக்கறிஞர்களின் அதியுயர் குழுவாகும். இந்த கழகமே இலங்கையில் உள்ள தொழில் சார் கணக்காளர்களுக்கு பட்டயக் கணக்கறிஞர்(CHARTERED ACCOUNTANT)எனும் பட்டத்தினை வழங்கும் உரிமையினை தன்னகத்தே கொண்டுள்ளது.
அவ்வாறுதான் றியாழ் அவர்களுக்கும் அக் கழகம் கணக்கறிஞர் என்ற பட்டத்தை அவரின் தேர்ச்சியின் மூலம் வழங்கியுள்ளது. இதனை அறியவில்லை என்றால் தெரி ந்தவர்களிடம் கேட்டு விட்டு அறிவிப்பாளர் சிஹாப்தீன் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இதனை எழுதுவதற்கும் நீங்கள் உண்மையில் அவரின் மீது பரிதாபப் படவில்லையே இதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நீங்களும் மறைமுகமாக விமர்சிக்கிறீர்கள் என்பதே மறைமுகமான உண்மையாகும்.
2015ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இடம் பெற்ற கொலைச் சம்பவத்தை கூட உங்கள் சகோதரர் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும் அவரின் ஆதரவாளர்களும் நீங்களும் ஒன்றினைந்தே அக் கொலைக்கு கணக்கறிஞர் றியாழ் மீது பலி சுமத்தியிருந்தீர்கள் அதனை எம் சமூகம் ஒரு போதும் மறக்கவில்லை. அப்போது உங்களுக்கு றியாழ் நல்லவராக தெறியாமல் போனதும் இப்போது நீங்கள் பரிதாபமாக நடித்து அவரை மட்டம் தட்ட முயற்சிப்பதன் பின்னனியும் நாம் அறியாமலில்லை. கடைசியில் சற்று உற்று நோக்கும் போது உங்கள் பதிவின் உதாரணம் ஆடு நனைவதென்று ஓநாய் அழுத கதையாகவே உள்ளது.
சம்மந்தப்பட்ட செய்திக்கு:......