ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (18.05.2017) காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான அரசியல் தலைமைகள் மற்றும் அரச கூட்டுத்தாபன, திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதேசத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகள் மற்றும் எதிர்காலத்தில் அமுலாக்கவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய அறிமுகமும் அனுமதிகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
