இறக்காமம் சிலை தொடர்பில் புத்திஜீவிகள் முதலைமைச்சரிடம் மகஜர் கையளிப்பு..!

றக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பாக சட்டத்தரணி பாறுக் சாஹிப் தலமயில் 12 பேர் கொண்ட குழுவில் SLMC, ACMC, NC, UNP கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் அரசியல்வாதிகளும் நலன்வரும்பிகளும் ஒன்றினைந்து நேரடியாகச் சென்று கிழக்குமாகாண முதலமைச்சர் கௌரவ ஹாபிஸ் நஸீர் அகமட் மற்றும் , EPC எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெவ்வை, EPC மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், சிப்லி பாறூக் , சுபைர் ஆகியோரை இரவு ஒரு மணிவரைக்கும் சந்தித்து மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பாக வரிவாக பேசப்பட்டது. 

இதன்போது உரிய ஆவணங்களை ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் கையளித்து எமது சமூகத்தின் நலன்கருதி பின்வரும் மூன்று கோரிக்கைகள் அவர்களிடம் முன்மொளியப்பட்டன.

01.மாகாணக் காணி ஆனையாளரின் அவசர முடிவுளை இடைநிறுத்தல்.

02.மாயக்கல்லி மலைக் காணி பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் ஆணைக்குழு ஒன்றை மாகாண சபையினூடாக நியமித்தல்.

03.இவ் விடயத்தை SLMC, ACMC,NC கட்சித் தலைவர்கள் மூன்று பேரும் இணைந்து ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டு சென்று உடனடித் தீர்வு காண்பதன் மூலம் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தலைத் தடுத்தல்.

மோலும் இவ்விடயம்தொடர்பாக மிகஅவசரமாக ஜநாதிபதி அவர்களின் கவனத்திட்கு கொண்டுசென்று உடநடி தீர்விைனை பொற்றுத் தருமாறு வோண்டுகோள் விடுக்கப்பட்டது.
எஸ்.எம்.சன்சீர்-இறக்காமம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -