அமைச்சர் அவர்களே நீங்கள் கடந்த 10 வருடத்துக்கு மேலாக அமைசுப் பொறுப்புக்களை வகிக்கின்ரீர்கள். உங்களுக்கென்று தனிக் கட்சியும் வைத்துள்ளீர்கள், அதற்கும் ஏராளமான நிதிகள் கிடைக்கும் என்று நம்புகின்றேன். வில்பத்து என்ற பிரச்சினை வரும் போது மறிச்சுக்கட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளில் வாழும் வயது முதிர்ந்த அம்மாக்களின் புகைப்படங்கள் வெளிவருகின்றன.
இதைப் பார்க்கும் என்னை அறியாமல் கண்கள் கலங்குகின்றன. இந்த மக்களின் நிலைமை இன்னும் மாற்றப் பட வில்லையா என்ற ஒரு துன்பப் பெரு மூச்சு என்னுள் அடிக்கடி வருகின்றது. நீங்கள் கிழக்குக்கு வரும் போது இந்த பூமியை குடிசைகளற்ற பூமியாக்குவேன் என வாக்குறுதியளித்தீர்கள். பின்னர் நீங்கள் அடுத்த பருவத்துக்குத் தான் கிழக்குக்கு வருவீர்கள். எங்கள் மண்ணில் குடிசைகளை அகற்ற முன் உங்களை நம்பி உங்களுக்கு வாக்களித்த மக்களின் குடிசைகளை முதலில் அகற்றுங்கள். ஊரெல்லம் சதொச கட்டுகிறீர்கள், பணமிருந்தால் தானே பொருள் வாங்க முடியும். அதற்கு முதல் உங்கள் அமைச்சால் அந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் தானே. வில்பத்து பிரச்சினையை தீர்க்க அரபு நாடுகளையே துணைக்கு அழைப்பேன் என்றீர்கள், அவ்வறாயின் அந்த அரபு நாடுகளைக் கொண்டு இந்த மக்களின் குடிசைகளை ஏன் உங்களால் இன்னும் மாற்ற முடியாமல் உள்ளது.
கிழக்கில் உள்ள எங்களுக்கு எதுவும் வேண்டாம் யுத்தால் பாதிக்கப்பட்டு புலிகளால் துரத்தப்பட்டு இன்று அரசியலுக்காக உங்களால் பழிவாங்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள். இல்லை வில்பத்து பிரச்சினையை மீண்டும் கிளரும் போது அந்த வீடுகள் தான் வேண்டும் என்றால் அவ்வாறான் அரசியல் செய்வதை விட்டும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். இப் போது வில்பத்து பிரச்சினைக்கு வருவோம். நீங்கள் தான் அடிக்கடி வில்பத்துவில் பாரிய அபாயம் என்பீர்கள். ஜனாதிபதியுடன் கடும் வாக்குவாதம் என்பீர்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் அந்த கதையை காணவில்லை. அடிக்கடி நீங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை கிழக்குக்கு வரும் போதெல்லாம் பின்னால கூட்டிக்கு வந்து பல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து விட்டுச் செல்வீர்கள். அதே பைசர் முஸ்தபா நேற்று கூறுகின்றார். முஸ்லிம் மக்களின் குடியேற்றங்களை எடுக்க வேண்டிய எந்த தேவையும் அரசங்கமாகிய எங்களுக்கு இல்லை. ஜனாதிபதி அதை விரும்பவும் மாட்டார் என்கிறார்.
அவ்வாறாயின் நீங்கள் தான் இதில் தில்லு முல்லு செய்கின்ரீகளா? உங்களுக்கு என்ன அமைச்சு வேண்டும் என்பதை தெளிவாக பேரம் பேசி உங்களால் பெற்றுக் கொள்ள முடியுமென்றால் ஏன் வில்பத்து பிரச்சினையில் அந்த அக்கறை உங்களுக்கு இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் வந்து ஒட்டிக் கொள்ளும் போது முசலிக்கு ஒரு தனியான பிரதேச சபை வேணும் என்று ஒரு ஓப்பந்தம் செய்த நீங்கள் ஏன் சாய்ந்தமருதிற்கும் ஒரு தனியான பிரதேச சபை வேணும் என்று அந்த ஓப்பந்தத்தில் நீங்கள் கேட்கவில்லை? நீங்கள் சத்திய தலைவராகவும் ஆளுமையுள்ள தலைவராகவும் இருந்தால் ஏன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களின் பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியாது போனது. உங்களுக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினையையே உங்களால் தீர்க்க முடியாது என்றால் ஊரான் வீட்டுப் பிரச்சினையை எப்படித் தீர்க்கப் போகிரீர்கள். பாவம் அந்த மக்கள் நொந்து போய் இருக்கின்ரார்கள், அவர்களை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.