பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் துவிச்சக்கர வண்டி வழங்கி சந்தோசம்ப்படுத்திய ஆசிரியை




அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த சிறுவர் பாடசாலை ஆசிரியை கேட்டி ப்ளொம்குவிஸ்ட். கேட்டி பணியாற்றும் பாடசாலையில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 650 சிறார்கள் கல்விகற்று வருகிறார்கள்.

கடந்த வருடம் மாணவன் ஒருவன், கேட்டியிடம் தனக்கு துவிச்சக்கர வண்டி என்றால் மிக விருப்பம் என்றும், வறுமையிலுள்ள தன் குடும்பத்தினரால் தனது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளது என்றும் கூறியுள்ளான். இதைக் கேட்டு வருந்தி கேட்டி, தனது மாணவர்கள் அனைவருக்கும் துவிச்சக்கர வண்டிகளை வாங்கிப் பரிசளிக்க வேண்டும் என விரும்பினார்.

இதற்காக, கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் இணையதளத்தில் நிதி சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். தேவையாக இருந்த 65 ஆயிரம் டொலர்கள் சேகரிக்கப்பட்டதும், ஒரே நாளில் மாணவர்களது வயதுக்கேற்ப ஒரே மாதிரியான 650 சைக்கிள்களை வாங்கி பாடசாலை வளாகத்தில் நிறுத்தி, அவற்றை மூடியும் வைத்தார்.

மறுநாள் காலை மாணவர்கள் வந்ததும், அனைவரையும் பாடசாலை வளாகத்துக்கு அழைத்துச் சென்று, மூடியிருந்த துணிகளை விலக்கிக் காண்பித்தார். அங்கே மினுமினுத்துக்கொண்டிருந்த புதிய துவிச்சக்கர வண்டிகளைக் கண்ட மாணவர்கள் பரவசக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் கேட்டி.

இதுபற்றித் தெரிவித்த அவர், “நான் நினைத்ததைவிடவும் மாணவர்களின் மகிழ்ச்சி அளவிட முடியாத அளவுக்கு இருந்தது. தேவையான நிதி சேர்ந்துவிட்டது. என்றபோதும் இன்னும் நிதியுதவிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்த நிதியைக் கொண்டு மாணவர்களுக்குத் தேவையான மேலதிக வசதிகளையும் செய்து தர எண்ணியுள்ளேன்” என்று கூறியுள்ளார். (வீ)

படிப்பினைக்காகவும் ஆசிரியையின் பரந்த நல்லெண்ணத்தையும் சுட்டிக்காட்டவே இதனை இங்கே பதிவிட்டோம்.

இது போன்ற சுவாரஷ்யமானதும் படிப்பினையானதுமான கதைகளை எமக்கு அனுப்பி வைத்தால் இம்போட்மிரரில் பதிவிடுவோம்.
அனுப்ப வேண்டிய ஈமைல் முகவரி:
news@importmirror.com

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -