


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊவா பிரதி பொது முகமையாளர் அலுவலகம் பதுளை, மெதிரிய வீதியில் வியாழக்கிழமை (30) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இலங்கை அரசின் 160 மில்லியன் ரூபா நிதியில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவில் ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் திசாநாயக்க, ஊவா மாகாண அமைச்சர் உபாலி சமரவீர, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்தரசிறி விதான, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தலைவர் கே.ஏ. அன்சார், வேலை பணிப்பாளர் மஹிலால் டி சில்வா மற்றும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
