நல்லாட்சி அரசு படையினரை காட்டிக்கொடுக்க முயற்சிக்கிறது என முன்னாள் ஜனாதிபதி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், மேற்குலக நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்று சிறிதும் தயங்காமல், இலங்கையின் உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக மறுப்புத்தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதித்தனாலேயே நாடு என்ற வகையில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் இம்முறை நாம் சிறிதும் சளைக்காமல் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கும் யோசனையை நிராகரித்துள்ளோம். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனது காலத்தில் இடம்பெற்றதனை மறந்து தற்போதைய அரசாங்கம் மீது பழி சுமத்துவது நியாயமற்றது.
நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பை மாற்றினாலும் எச்சந்தர்ப்பத்திலும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்ககூடாது என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக உள்ளனர். அமைச்சரவை அமைச்சர்களும் அதே நிலைப்பாட்டிலே காணப்படுகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.(ஆநி)