மு.இராமச்சந்திரன்-
லிந்துலை என்போல்ட் தோட்டத்தில் எற்பட்ட சூறாளியால் ஏற்பட்ட பாதிப்புக்களை மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடிருப்புக்களுக்கான கூரைதத்கரங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்தச் சூறாவளியின் போது பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வீட்டையும் அமைச்சர் திகாம்பரம் உட்பட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இதன் போது அமைச்சருடன் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், ராம், அமைச்சின் இணைப்புச்செயலாளர் நகுலேஸ்வரன், மக்கள் தொடர்பு அதிகாரி விஜயகுமார், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரவீந்திரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் சிவானந்தன், அட்டன் - டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் நந்தகுமார், பிரதேச அமைப்பாளர்களான பாபு, ரமேஸ், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகள், தோட்ட முகாமையாளர் ஆகியோரும் விஜயம் செய்தனர்.