சாய்ந்தமருதில் வட்டியில்லா வங்கி அங்குரார்ப்பணம்.!

எம்.வை.அமீர்-
ஸ்லாம் மிகக்கடுமையாக வெறுக்கும் வட்டியில் இருந்து சமூகத்தைக் காக்கும் பணியில் சில ஊர்களில், அவ் ஊர்களின் பள்ளிவாசல்களை மையப்படுத்தி, வட்டியில்லாக் கடன் உதவித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு, வட்டியின் பக்கமிருந்து மக்கள் மீட்க்கப்பட்டு வரும் இப்போதைய சூழலில், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவப்பகிர்வுகளின் பின்னர் 2017-03-10 ஆம் திகதி மக்தப் அத்- தகாபுல் எனும் பெயரில் வட்டியில்லா வங்கி ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவின் தலைமையிலும் ஐ.அப்துல் குத்தூஸின் வழிநடத்தலிலும் இடம்பெற்ற வட்டியில்லா வங்கி அங்குரார்ப்பணம் மற்றும் விஷேட சொற்பொழிவு நிகழ்வுக்கு காத்தான்குடி அல் மானார் அறிவியல் கல்லூரியிலிருந்து அஷ் ஷெய்க் அக்ரம் அபூவக்கர் (நளீமி) அவர்கள் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முற்றிலும் பாதுகாப்பு மற்றும் இஸ்லாமிய அடிப்படையிலான நடைமுறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த வங்கி, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் அஷ் ஷெய்க் என்.எம்.அப்துல் முஜீப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வட்டியற்ற சமூதாயத்தை உருவாக்கும் பொருட்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிருவாகசபை, சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமாசபை,பைத்துஸ்-ஸக்காத், வர்த்தக சங்கம், வர்த்தகர்கள் மற்றும் தனவந்தர்கள் என பலரும் கைகோர்த்து செயட்படவுள்ள

“சாய்ந்தமருது மக்தப் அத்- தகாபுல்” இஸ்லாமிய நிதி நிறுவனத்துக்கு, அங்குரார்ப்பண நிகழ்வின்போது பங்குகளாகவும் அன்பளிப்புக்களாகவும் சுமார் 2225000.00 ரூபாய்கள் ஊரவர்களால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் நேரடிக்கண்காணிப்பில் பல்வேறு தலைமைத்துவ சபைகளைக்கொண்டு இயங்கவுள்ள இந்த இஸ்லாமிய நிதி நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை அஷ் ஷெய்க் என்.எம்.அப்துல் முஜீப் விளக்கமாக எடுத்துக்கூறினார்.

கட்டமைப்புடம் செயட்படவுள்ள இந்த நிறுவனத்தின் முகாமையாளராக எம்.சி.ஏ.பரீட் மற்றும் பிரதி முகாமையாளராக ஏ.ஆப்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -