முகில்வண்ணனின் மூன்றுநூல்கள் வெளியீட்டுவிழா..!

காரைதீவு நிருபர் சகா-
நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் வித்தகர் முகில்வண்ணன் வே.சண்முகநாதன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டுவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெறவுள்ளது. கல்முனை சரவணா ஜுவலர்ஸ் அனுசரணையில் கல்முனை நியூஸ் இணையத்தனம் ஏற்பாடு செய்யும் இந்நூல்வெளியீட்டு விழா கல்முனை உவெஸ்லிக்கல்லூரியில் கல்முனை தமிழ்ச்சங்கத்தலைவர்கோட்டக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி பரதன்கந்தசுவாமி தலைமையில் நாளை பிற்பகல் 3மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நூல் வெளியீட்டுவிழாவிற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் த.கலையரசன் ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள். சிறப்பதிதியாக கல்முனை தமிழ்பிரதேச செயலாளர் க.லவநாதன் கலந்து சிறப்பிப்பார்.

நாளும் நாமும், நம்பினோர் கெடுவதில்லை, நீறுபூத்த நெருப்பு, ஆகிய 3 நூல்களின் அறிமுகவுரையையும் நயவுரையையும் எழுத்தாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தவுள்ளார். கல்முனை பற்றிமா பிரதி அதிபர் சி.புனிதன் நிகழ்ச்சியை நெறியாழ்கை செய்வார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -