திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் நடாத்த நீதிமன்றம் தடை உத்தரவு..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலையில் எதிர்வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருகோணமலை தலைமையக பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஜயந்தவினால் அன்று (29) புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்ட்டது. கடந்த பெப்ரவரி 28ம் திகதி தொடக்கம் இற்றைக்கு வரைக்கும் கிழக்கு ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் சமாதானமான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் இம்மாதம் 04ம் திகதி முதல் தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் யொவுன்புர என்ற நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்திச்செல்வதோடு இந்த வேலைத்திட்டம் 2017-04-02ம்திகதி வரை நடாத்துவதற்கு தயார்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இந்நிகழ்ச்சிக்காக பொது மக்களும் அரச உத்தியோகத்தர்களும் மேன்மை தாங்கிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் உள்நாட்டு.வௌிநாட்டு அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர்.

இதனால் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர்களுடைய எதிர்பார்ப்பு அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தற்போது அமைதியாக நடாத்தி செல்லும் ஆர்ப்பாட்டத்தை மக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரதான வீதிகளுக்கு நெறிசலை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவியாக காணாமல் போன அங்கத்தவர்ளையும் இணைத்துக்கொண்டு இதற்கு முன்வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் பொலிஸார் மன்றிற்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கும் தடை என உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் போக்குவரத்திற்குறிய பொதுவான பாதையில் இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது.போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பு .பொது சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ள முடியாது.

அரச அதிகாரிகள்.உயர் அதிகாரிகள்.அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வருகை தரும் நேரம் பாதையை வழிமறித்து பொதுச்சொத்துகளுக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது. வேலையில்லா ஆர்ப்பாட்டத்தின் தலைவரான செல்வறாஜ் சிவக்குமார் மற்றும் செயலாளரான ஜெகநாதன் பிரகநாதன் அல்லது பிரபு குமார் போன்றவர்களுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிப்பதுடன் தங்களுடைய ஏனைய சங்க உறுப்பினர்களை அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -