ஹக்கீமிற்கு எதிரான மேடையில் தாஹிர் உரையாற்றியது என்ன..?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஹசன் அலியினால் நிந்தவூரில் 03.03.2017 வெள்ளிக்கிழமை மாலை நடாத்தப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர்களாகவும், அம்பாறை மாவட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருக்கின்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சட்டத்தரனியுமான அன்சில் அல்- அமீரியுடன் ஹசன் அலியின் சொந்த ஊரினையும் தாண்டி முஸ்லிம் காங்கிரசிற்கு அதிகளவில் வாக்களிக்கும் நிந்தவூரின் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், உயர் பீட உறுப்பினருமான தாஹிர் ஆகிய இருவரும் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமானவர்களாக பார்க்கபடுகின்றனர். அதற்கும்அப்பால் குறித்த கூட்டத்தினை பல சவால்களுக்கு மத்தியில் நடத்தி முடிப்பதற்கு ஹசன் அலிக்காக அர்ப்பனிப்புடன் பங்காற்றியவர்கள் என்றும் கூற முடியும்.

அந்த வகையிலே நிந்தவூர் பிரதேசத்தில் தனக்கென ஒரு நன் மதிப்பினையும், மக்கள் மத்தியில் அமோக செல்வாக்கினையும் வைத்திருக்கும் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான தாஹிர் ஹசன் அலியின் நிந்தவூர் மேடையில் ஆற்றிய உரையின் விரிவான விளக்கத்துடனான முழுமையான காணொளி… இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -