இந்நாட்டு பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக அரசாங்க தரப்பினரால் பாராளுமன்ற அமர்வு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று சபையில் சபாநாயகருக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சபைத் தலைவர், அரசாங்க தரப்பு பிரதான அமைப்பாளர் உட்பட அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இந்த புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
கூட்டு எதிர்க் கட்சிக்கு அதிக நேரம் கருத்துத் தெரிவிக்க கொடுத்து, சபைத் தலைவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமை என்பன குறித்தே இந்த எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டது.
இதனையடுத்தே, சபாநாயகர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் சபை அமர்வுகளை ஒத்திவைத்துள்ளார்.