தோட்ட சேவையாளர் சங்கத்தினர் பாரிய ஆர்பாட்டம்..!

மு.இராமச்சந்திரன்-
தோட்ட சேவையாளர்களின் சம்பள உயர்வில் துறைமார் சம்மேளம் அசமந்த போக்கை கடைபிடிப்பதற்கு எதிப்பு தெரிவித்து தோட்ட சேவையாளர்கள்  பாரிய கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அட்டன் மணிக்கூன்டு சந்தியிலே 12.03.2017. 10 மணியளவில் அட்டன் பஸ்தரிப்பிடத்திலிருந்து நகரின் பிரதான வீதியூடாக மணிக்கூடு சந்திவரை பேரணியாக சென்று மணிக்கூண்டு சந்தியிலே ஆர்பாட்டம் நடைபெற்றது.

2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தோட்ட சேவையாளர்களுக்கான சம்பள உடற்படிக்கை நிறைவடைந்தும் மூன்று கட்ட பேச்சுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடபெற்ற நிலையில் சரியான தீர்வு கிடைக்காத நிலையிலே இப் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

100 க்கு 40 வீதம் சம்பளவுயர் வழங்க கோரிய போதிலும் முதலாளிமார் சம்மேளம் இனங்க மறுத்துவருவதுடன் 100 க்கு 20 வீதம் சம்பத்தை அதிகரித்து தருவதாக தெரிவித்துள்ளனர் நாட்டில் நிலவிவரும் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தமது இயல்பு வாழ்கையை முன்னெடுக்கை முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்பாட்ட காரர்கள் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து எமது சம்பளவுயர்வு கோரிக்கைக்கு துறைமார் சம்மேளனம் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காத நிலையில் எதிர்வரும் 28 ம் திகதி முதல் நாடளவிய ரீதியில் தோட்ட சேவையாளர்கள் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க ஜயவர்தன தெரிவித்தார் ஆர்பாட்டதில் அட்டன் நகரின் பிரதான வீதி போக்குவரத்து பல மணித்தியலாங்கள் ஸ்தம்பிதமடைந்தது.

ஆர்பாட்டதில் நுவரெலியா தலவாக்கலை அட்டன் கிளைகளை சேர்ந்த அட்டன் ஆயிரத்திற்கும் தோட்ட சேவையாளர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -