எம்.ரீ. ஹைதர் அலி-
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மீராவோடை கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட தெரு மின் விளக்குகளை திருத்தும் பணியும் புதிதாக இனங்காணப்பட்ட சில இடங்களுக்கு புதிதாக தெரு மின் விளக்குகள் பொருத்தும் பணியும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் 2017.03.08ஆந்திகதி தொடக்கம் (புதன் மற்றும் வியாழன்) மேற்கொள்ளப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மீராவோடை பிரதேசத்தில் தெரு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பழுதடைந்த நிலையில் காணப்பட்ட தெரு மின் விளக்குகளை திருத்தியமைக்கும் மற்றும் புதிதாகவும் தெரு மின் விளக்குகளை இடுவதற்கும் முன்னெடுப்புக்களை மேற்கொண்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் ஆகியோருக்கு பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.