எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
பல ஆண்டு காலமாக பிரதேச மக்களின் வைத்திய தேவையை நிறைவு செய்து வரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் சுமார் 3500 அடி சுற்றுப்பரப்புக் கொண்ட சுற்று மதில் இருவரை காலமும் அமைக்கப்படாமையால் காணப்பட்டது.
இதன் காரணமாக வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்களை மேற்கொள்வது சிரமமாகக் காணப்பட்டது. இந்த விடயத்தில் அதிகம் அக்கறை கொண்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களான SIM.நிப்ராஸ், H.M.கலந்தர், MHM.இம்ரான் ஆகியோர் கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நஸீர் அகமட் அவர்களிடம் சுற்று மதிலினை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
கல்குடா மக்களின் ஏராளமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் இந்த வேண்டுகோளை ஏற்று, சுற்று மதில் அமைப்பதற்காக சுமார் 10 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டை ஒதுக்கீடு செய்து தந்துள்ளமை பாராட்டுக்குரியது.
இந்த வேளையில் எமது வேண்டுகோளை ஏற்று இப்பிரதேசத்தின் பிரதான வைத்தியசாலையாகக் காணப்படும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மிக முக்கிய தேவையாகக் காணப்பட்ட சுற்றுமதில் அமைக்க பாரியளவிலான நிதியை ஒதுக்கித் தந்துதவியமைக்கு வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் சார்பிலும் இப்பிரதேச மக்களின் சார்பிலும் மனபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மென்மேலும் அவரது சேவை எமது வைத்தியசாலைக்கும் எமது பிரதேசத்திற்கும் கிடைக்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கின்றோம்.